நீங்க நடந்துக்கிறதைப் பொறுத்தே நட்பு: பாகிஸ்தானுக்கு அரிந்தம் பாக்சி பதிலடி!
Mar 16, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீங்க நடந்துக்கிறதைப் பொறுத்தே நட்பு: பாகிஸ்தானுக்கு அரிந்தம் பாக்சி பதிலடி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 4, 2023, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தான் மட்டுமல்ல, அனைத்து அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். ஆனால், அது அந்தந்த நாடுகள் நடந்துகொள்வதைப் பொறுத்தே இருக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாடு கடந்த 1-ம் தேதி நடந்தது. இம்மாநாட்டில் பேசிய அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், “இந்தியாவுடன் நாங்கள் போரை விரும்பவில்லை. அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண விரும்புகிறோம். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் நமது தீவிரமான பிரச்னைகள் புரிந்துக் கொள்ளப்படாவிட்டால், அண்டை நாடுகளுடன் நட்பாக இருக்க முடியாது என்பதை அண்டை நாடுகளும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தான் 3 போர்களை நடத்தியுள்ளது. இதன் காரணமாக பொருளாதார இழப்பு மற்றும் வளங்கள் பற்றாக்குறையைத்தான் சந்தித்தோம். ஆகவே, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். ஒருவரையொருவர் ஏமாற்ற முயற்சிக்க மாட்டோம்” என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் வாராந்திர கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, இந்தியாவுடன் போரை விரும்பவில்லை. எல்லா பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கூறியது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “பாகிஸ்தான் மட்டுமல்ல, அனைத்து அண்டை நாடுகளுடனும் இயல்பான உறவையே இந்தியா விரும்புகிறது. ஆனால், அதற்கானச்  சூழலை அந்தந்த நாடுகள்தான் உருவாக்க வேண்டும். அதாவது, பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும். அதுவரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்பதே கிடையாது” என்று தெரிவித்தார்.

ShareTweetSendShare
Previous Post

இந்திய ராணுவத்தின் முதல் மேஜர் ஜெனரலாக தமிழகப் பெண் பதவியேற்பு

Next Post

இமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை தீவிரம்: 200 பேர் பலி… 31 பேர் மாயம்!

Related News

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies