செண்பகவல்லி அணை எப்போது சரி செய்யப்படும்? - அண்ணாமலை கேள்வி
Oct 6, 2025, 03:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செண்பகவல்லி அணை எப்போது சரி செய்யப்படும்? – அண்ணாமலை கேள்வி

Web Desk by Web Desk
Aug 10, 2023, 09:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக தேர்தல் வாக்குறுதியில் செண்பகவல்லி அணையைச் சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகியும், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது நண்பரான கேரள முதல்வரிடம் இது குறித்து பேசாமல் இருக்கிறார்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி உள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

“இன்றைய என் மண் என் மக்கள் பயணம் விருதுநகரில் வெகு சிறப்பாக நடந்தேறியது. தனது ஆட்சிக் காலத்தில் 12 அணைகள் கட்டி, தமிழகத்தில் விவசாயம் செழிக்கச் செய்தவர் கர்ம வீரர் காமராஜர். அவருக்குப் பிறகு, தமிழகத்தில் விவசாயம் செழிக்க பல திட்டங்கள் கொண்டு வந்தவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே. தமிழகத்தில் விவசாய நிலங்களில் பாசனத்தை மேம்படுத்த கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு வழங்கிய நிதி 2961 கோடி ரூபாய்.

நெல்லை மாவட்டம் வாசுதேவ நல்லூரை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கிறது செண்பகவல்லி அணை. இந்த அணை மூலம், கேரளா மற்றும் தமிழகம் விவசாயத்துக்கு பாசன வசதி பெற்று வருகிறது. தமிழகத்தில் விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 40,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில், இந்த அணையை இயக்க முடியாது என்று கேரள அரசு கூறிவிட்டது. திமுக, இதுகுறித்து சிறிதும் அக்கறை செலுத்தவில்லை. தேர்தல் வாக்குறுதி எண் 84ல், செண்பகவல்லி அணையை சரிசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்றுகூறி, ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகின்றன. ஆனால், தனது நண்பரான கேரள முதல்வரிடம் இது குறித்து பேசாமல் இருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் 12,000 புதிய அரசுப் பள்ளிகளைத் திறந்தார். அதனால் கற்றவர்கள் சதவீதம் 30% ஆக உயர்ந்தது. ஆனால் திமுக, 10,000 சிதிலமடைந்த பள்ளிக் கட்டிடங்களுக்குப் பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டுவோம் என்று கூறியது. ஆனால் இதுவரை ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்.

இன்றைய #EnMannEnMakkal பயணம் விருதுநகரில் மாபெரும் மக்கள் திரள் நடுவே வெகு சிறப்பாக நடந்தேறியது.

தனது ஆட்சிக்காலத்தில், 12 அணைகள் கட்டி, தமிழகத்தில் விவசாயம் செழிக்கச் செய்தவர் கர்ம வீரர் காமராஜர் அவர்கள். அவருக்குப் பிறகு, தமிழகத்தில் விவசாயம் செழிக்க பல திட்டங்கள் கொண்டு… pic.twitter.com/VBSpfj6seL

— K.Annamalai (@annamalai_k) August 10, 2023

 

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ உட்கட்டமைப்புக்கு ரூ.12,641 கோடி நிதி, கரோனா பேரிடர் நிதி ரூ.1,395 கோடி என பிரதமர் மோடி அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊழல் திமுக ஆட்சியில், பிரசவித்த தாய்க்கும் சேய்க்கும் படுக்கை வசதி இல்லை, அரசு மருத்துவமனைகளில் தவறான சிகிச்சையால் இரண்டு உயிர்கள் பலியாகியிருக்கின்றன. தினம் ஒரு துயர சம்பவம் நடந்தேறுகிறது. சட்டம் ஒழுங்கு ஒரு பக்கம் சந்தி சிரிக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில், மொத்த முத்ரா கடன் உதவி 2,02,603.94 கோடி ரூபாய். விருதுநகர் மாவட்டத்துக்கு மட்டும் வழங்கப்பட்ட முத்ரா கடன் 3,272 கோடி ரூபாய். இதன் மூலம் பலனடைந்த கிருஷ்ணமூர்த்தி, பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பலனடைந்த பிருந்தாதேவி, பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தில் பயனடைந்த ஜெயக்கொடி, பிரதமரின் விவசாயத்துக்கான நீர்ப்பாசன திட்டத்தில் பயன்பெற்ற கண்ணன், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பலனடைந்த காளீஸ்வரி. இவர்கள்தான் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரி.

பருத்திக்கு ஆதார விலை இரண்டு மடங்கு உயர்வு, பருப்பு ஆதார விலை 74 மடங்கு உயர்வு, ஜவுளிப் பூங்கா லட்சிய நகரம் என விருதுநகர் அறிவிப்பு, அம்ரித் திட்டத்தின் கீழ் விருதுநகர் ரயில் நிலையம் தரம் உயர்வு, மருத்துவக் கல்லூரி என, பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு விருதுநகருக்கு அதிக நலப்பணிகள் செய்துள்ளது பிரதமர் மோடி மட்டுமே.
தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வரும் மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமாகப் புறக்கணிப்போம். ஊழலற்ற வளர்ச்சிப் பயணம் தொடர, பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர வாக்களிப்போம்” என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: annamalaiannamalai bjpMK Stalin
ShareTweetSendShare
Previous Post

நிலவைப் படம் பிடித்து அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம்!

Next Post

குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி தளம் : மத்திய அரசு  ஒப்புதல்

Related News

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது திமுக அரசு – எல்.முருகன் குற்றச்சாட்டு!

தர்மபுரி : சுகாதாரம் இல்லாத பூங்கா – பொதுமக்கள் அவதி!

கோவில்பட்டி – மோதலைத் தூண்டும் வகையில் செயல்படும் பங்குத்தந்தையை மாற்ற வலியுறுத்தி கிறிஸ்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் – 24 பேர் பலி!

மும்பையில் புதிதாக வீடு வாங்கிய சமந்தா!

ஜம்மு-காஷ்மீர் : கடும் பனிப்பொழிவால் நிலவும் ரம்மியமான சூழல்!

உத்தரப்பிரதேசத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு – பழமையான கார்களின் அணிவகுப்பு!

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது – ஜெய்சங்கர்

மதம், மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இந்தியர்களும் ஒன்றுபட வேண்டும் – மோகன் பாகவத்

ரூ.266 கோடி வசூலித்த ஓஜி திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies