மெட்ரோ இரயில் வழக்கமான நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.
தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ இரயில் பயணிகளின் வசதிகாக நெரிசல் மிகு நேரங்களில் இன்று (11.08.2023) மட்டும் இரவு 10:00 மணி வரை மெட்ரோ இரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, மெட்ரோ இரயில் பயணிகள் நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ இரயில் சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.
மேற்கண்ட மெட்ரோ இரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று (11.08.2023) மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.