முதன்முறையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம்!
Mar 15, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதன்முறையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம் செய்யப்படுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. இத்தீர்மானத்தில் மீதான விவாதம் ஆகஸ்ட்  8, 9-ம் தேதிகளில் நடந்தது. இதற்கு மத்திய அமைச்சர்கள் பலரும் பதிலளித்து பேசினர். அப்போது, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, இடையூறை ஏற்படுத்தினார்.

நேற்று, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதற்திற்கு பதிலளித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போதும், பிரதமரைப் பேசவிடாமல் இடை இடையே இடையூறை ஏற்படுத்தினார் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி. இதையடுத்து, அவரை அவையிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், “அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பேசும் போது, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி அடிக்கடி இடையூறு செய்தார். பலமுறை அவரை எச்சரித்தும் கேட்கவில்லை. இவ்வாறு இடையூறு செய்வது அவருக்கு வாடிக்கையாகி விட்டது. மேலும், தேசத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் கூறினார். ஆகவே, அவரது தவறான நடத்தையின் காரணமாக, இந்த விஷயத்தை மேலதிக விசாரணைக்காக அவையின் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்பவும், குழு தனது அறிக்கையைச்  சமர்ப்பிக்கும் வரை ஆதிர் இரஞ்சன் சௌத்ரியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி, தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இத்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். ஆகவே, இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: Adhir Ranjan ChowdhuryAdhir RanjanIndian National CongressINC Adhir Ranjan
ShareTweetSendShare
Previous Post

“இந்திய” இனி “பாரதிய” : பெயர் மாறும் சட்டங்கள்!

Next Post

11 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies