வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்குப் புறப்பட்ட விமானம், சிறிது நேரத்தில் விமானத்தின் மீது பறவை மோதியது. இதில் விமானத்தின் ஒரு டயர் வெடித்ததால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது.
அதேபோல் மற்றொரு விமானத்தின் மீது பறவை மோதியதில் அதன் சில எந்திரங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் இரு விமானங்களின் பயணமும் ரத்து செய்யப்பட்டு மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
















