இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணி வென்றுள்ளது . தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5-வது டி20 போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
மேற்கு இந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 எனவும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 எனவும் கைப்பற்றியது.
தொடரின் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா, 18 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது.
மேற்கு இந்திய அணியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கிங், 55 பந்துகளில் 85 ரன்கள் எடுத்திருந்தார் அணியின் வெற்றிக்கு வலி வகுத்தார்.
தொடரில் சிறப்பாக செயல்பட்ட நிக்கோலஸ் பூரன் தொடர் நாயகன் விருதை வென்றார்.