திருச்செந்தூரில் ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையின் போது நடைபெற்ற நிகழ்வில் 21 தியாகிகளின் வாரிசுகளுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருது வழங்கி சிறப்பித்தார்.
முன்னதாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளிடம் பேசிய அண்ணாமலை,
சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் மருத்துவப் படிப்பில் சேர்ந்து வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்கள் அதிகமானோர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக நீட் தேர்வு எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்து வருகிறார்கள். நீட் தேர்வினால் தமிழகத்தில் மாணவனும் அவரது தந்தையும் உயிரை மாய்ந்துள்ளனர். இது அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் அதை வைத்து அரசியல் செய்கிறார்கள்.
குறிப்பாக நீட் தேர்வை வைத்து முதல்வர் அரசியல் செய்ய வேண்டாம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் நீட் தேர்வை பாருங்கள். முதல்வர் முதல்வராக செயல்படாமல் எதிர்க்கட்சித் செயல்பட்டு கொண்டிருக்கிறார்? அப்படி என்றால் தமிழகத்தின் முதலமைச்சர் யார்? நீட் தேர்வைக் காரணம் காட்டி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பது சரியல்ல. எல்லா விஷயத்திலும் மக்களை அரவணைத்து, எல்லாருக்கும் சமமான இருக்கக்கூடிய முதல்வராக இல்லாமல், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொன்னாரே அதே போல தான் தற்போதும் முதலமைச்சராகியும் சொல்கிறார்.
“தமிழகத்தில் தற்போது மூன்றரை கோடி மகளிர் உள்ளனர், குடும்ப அட்டையில் 2.25 கோடி குடும்ப தலைவி உள்ளனர். ஒரே குடும்பத்தில் மாமியார் மருமகள் இருந்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படாது. கூட்டுக் குடும்பத்தை வேண்டாம் என சொல்கிறதா? தமிழக அரசு, ஓய்வூதியம், விவசாயத்திற்கான ஊதியம், இந்திரா காந்தி மாற்று திறனாளிக்கான ஊதியம், மின்சாரத் கட்டணம் வீட்டின் அளவு, உள்ளிட்ட காரணங்களால் மகிழும் உரிமை தொகை வழங்கப்படாது.
மகளிர் உரிமை தொகைக்கான ஆணை என்பது விசித்திரமான ஆணை. எத்தனை பேரை அந்தத் திட்டத்திலிருந்து வெளியே எடுக்கலாம் என்று திட்டம் போட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. இதில் 7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2. 25 கோடியே குடும்ப அட்டையிலிருந்து, 70 லட்சமாக குறைக்க திமுக திட்டமிடுகிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அரிவாள் வெட்டு, கவுன்சிலருக்கு வெட்டு என தினமும் பிரச்சினை எழுகிறது. கஞ்சாவை கட்டுப்படுத்தவில்லை. எல்லா நிலைகளிலும் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது.
தமிழக காவல் துறையின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு திமுகவினருக்கு சாதகமாக செயல்படச் சொன்னால் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கும்? இதுவரை 29 தொகுதிகளில் பயணம் செய்துள்ளோம். மக்கள் எழுச்சியைக் காண முடிகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 40-க்கு 40 இடங்களை வெல்லும் என்பதை இந்த பாத யாத்திரை உறுதி செய்யும்.” எனத் தெரிவித்தார்.