கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணைகளில் 14 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு 4 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று முதல் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் உடனடியாக பரிசல்களைக் கரைக்கு கொண்டு வந்தனர். பரிசலுக்குத் தடை விதிக்கப் பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.