பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 15,000 கோடி ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்ததற்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, செப்டம்பர் 17 அன்று முதல், பாரம்பரியக் கருவிகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தும் கைவினைக் கலைஞர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், 15,000 கோடி ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்கப்படும் என்று, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, செப்டம்பர் 17 அன்று முதல், பாரம்பரியக் கருவிகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்தும் கைவினைக் கலைஞர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், 15,000 கோடி ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா யோஜனா திட்டம் தொடங்கப்படும் என்று, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு… pic.twitter.com/lpbRnS66P8
— K.Annamalai (@annamalai_k) August 16, 2023
இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தொழிலாளர்களான தச்சர்கள், பொற்கொல்லர்கள், சலவைத் தொழிலாளர்கள், கொத்தனார்கள், சிகை திருத்தும் தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் மேம்பாட்டிற்கு, இந்த புதிய திட்டம் மிகுந்த உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.