நாடு முழுவதும் 9,86,585 ஆசிரியர் காலி பணியிடங்கள்- உடனடியாக நிரப்ப நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல். .
Jan 22, 2026, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் 9,86,585 ஆசிரியர் காலி பணியிடங்கள்- உடனடியாக நிரப்ப நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல். .

Murugesan M by Murugesan M
Aug 16, 2023, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 9 லட்சத்து 86 ஆயிரத்து 585 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்ப மாநில அரசுகளிடம் பேசுமாறு, மத்திய அரசுக்கு, நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 11 ஆம் தேதி முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கல்வி, மகளிர், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைகளின் நிலைக்குழு ஒரு முக்கியமான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

பாஜக எம்.பி.யான விவேக் தாக்கூர் தலைமையிலான இந்த நிலைக்குழு நாடு முழுவதிலும் 2022 – 23 கல்வியாண்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்க்கு மத்திய அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. அதில், ’2022-23 கல்வியாண்டில் நாடு முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் மொத்தம் உள்ள ஆசிரியர்கள் பணியிடங்கள் 62,72, 380. இவற்றில் 9,86,585 பணியிடங்கள் பல்வேறு காரணங்களால் காலியாகி நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றில், 7,47,565 துவக்கப்பள்ளிகளிலும், உயர்நிலைப்பள்ளிகளில் 1,46,334 மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 92,666 பணியிடங்களும் காலியாக உள்ளன.’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றின் மீது தனது கருத்துக்களை முன்வைத்த நாடாளுமன்ற நிலைக்குழு, ’இவற்றை உடனடியாக நிரப்பினால்தான் மத்திய அரசு தனது புதிய கல்விக் கொள்கையின்படி 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் சதவிகிதத்தை விரைந்து அமலாக்க முடியும் என்று  அந்த நிலைக்குழு கருத்து கூறியுள்ளது.

இந்த ஆசிரியர் பணியிடங்கள் பெரும்பாலான மாநிலங்களில் வெளிப்படையாக இல்லை. இதை சரிசெய்ய, ஆசிரியர்களை முறையாக தேர்வு செய்து நியமிக்க தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.’ எனப் பதிவு செய்துள்ளது.

கல்வி என்பது மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் கடமை என மத்திய அரசு கூறியிருந்தது. இதை ஏற்க மறுத்த நாடாளுமன்ற நிலைக்குழு, ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கூறி அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு பேச வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இதை ஏற்று மத்திய கல்வித் துறை சார்பில் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்களை அழைத்து பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் ஆசிரியர் காலி நிலை குறித்து, மத்திய கல்வித்துறை இணை அமைச்சரான அன்னபூர்ணா தேவி பதிலளித்திருந்தார், தமிழகத்தின் அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் மொத்தம் 1,44,968 அதில் 1,43,215 நிரப்பப்பட்டவை எனவும்; 1753 இடங்கள் இன்னும் நிரப்பப்பட வேண்டியவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

Tags: school teacher
ShareTweetSendShare
Previous Post

நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் பரிசல் பயணம் தடை!

Next Post

பந்து வீச்சாளராகவும் உள்ள பேட்ஸ்மேன்களே இந்தியக் கிரிக்கெட் அணிக்குத் தேவை !- ஆகாஷ் சோப்ரா

Related News

தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் – இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி

இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி!

4- வயது பெண் குழந்தையை சீரழித்த தாயின் காதலன்!

நண்பர்கள் தான் சந்தோசம் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

கோதையாற்றில் தென்பட்ட முதலை – பொதுமக்கள் அச்சம்!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம்

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் பாடலாசிரியர் வைரமுத்து நிகழ்ச்சியில் காலணி வீச்சு!

தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கபோகும் பிரதமர்!

பிரதமர் பங்கேற்கும் மாநாடு – நாளை செங்கல்பட்டு முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை!

“அமெரிக்காவை தவிர கிரீன்லாந்தை வேறு யாராலும் பாதுகாக்க முடியாது” -அதிபர் ட்ரம்ப்

பிரதமர் மோடி தனது ஆகச்சிறந்த நண்பர் -அமெரிக்க அதிபர் டிரம்ப்!

குளத்திற்குள் முருகன் சிலை… அர்ச்சகர் செய்த அதிர்ச்சி சம்பவம்… சிக்க வைத்த மக்கள்

ஆடிட்டர் குருமூர்த்திஉடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய சந்திப்பு

EPS வீட்டிற்கு வருகை புரிந்த பியூஷ் கோயல் – காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!

தினம் தினம் அல்லல்படும் கோவை மக்கள் – தண்ணீர்பந்தல் – விளாங்குறிச்சி சாலைக்கு எப்போதுதான் தீர்வு!

ஈரான் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்த முடிவு -அமெரிக்கா போர் ஆயத்தம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies