இந்திய கிரிக்கெட் அணியில் இனிவரும் காலங்களில் பந்து வீச்சாளராக இருக்கக் கூடிய பேட்ஸ்மேன்களையே இந்திய கிரிக்கெட் அணி தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வேண்டுகோள் விடுத்து உள்ளார் .
ஆகாஷ் சோப்ரா தனது எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் கூறியதாவது,
“வாஷிங்டன் சுந்தர் மாதிரியான சிறந்த சூழல் பந்து வீச்சாளராகவும், சிறந்த ஆல்-ரவுண்டராகவும் இருப்பவர்களையே இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பவர்களுக்குப் பந்து வீசத் தெரியவில்லை, சிறந்த பந்து வீச்சாளர்களுக்கு பேட்டிங் செய்யத் தெரியவில்லை. யஷ்வி திலக் போன்ற இளம் ஆல்ரவுண்டர்களைத் தேர்ந்தெடுப்பது அணிக்குச் சிறப்பாக இருக்கும். அவருக்கு பந்துவீசும் வாய்ப்புக்களை அதிகமாக்கிக் கொடுக்க வேண்டும்.
ரோஹித் ஷர்மா (11 சர்வதேச விக்கெட்கள்) மற்றும் விராட் கோலி (எட்டு சர்வதேச விக்கெட்டுகள்) போன்ற இந்திய நட்சத்திரங்கள் தங்கள் தொடக்கக் காலங்களில் பந்து வீச்சாளராக இருந்தாலும், பின்னர் பல ஆண்டுகளாகப் பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால், முந்தைய கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் (201 சர்வதேச விக்கெட்கள்), வீரேந்திர சேவாக் (136 சர்வதேச விக்கெட்கள்), சௌரவ் கங்குலி (132 சர்வதேச விக்கெட்கள்), யுவராஜ் சிங் (148 சர்வதேச விக்கெட்கள்) போன்றவர்கள் அணியில் அப்படி இருக்கவில்லை. அதுவும் குறிப்பாகச் சிறந்த ஆல்ரவுண்டரான சுரேஷ் ரெய்னா (62 சர்வதேச விக்கெட்டுகள்) அணிக்குத் தேவைப்படும் போது முக்கியமான விக்கெட்டுகளை எடுக்கும் திறமைக் கொண்டிருந்தார்.
கடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் திலக் சிறப்பாகப் பந்து வீசினார். ஆனால், இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. காரணம்? போட்டியின் போது, இந்தியாவின் பேட்டிங் தான்.” என்று தெரிவித்து உள்ளார்.