நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பெரும் பங்காற்ற வேண்டும்; முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்!
Oct 5, 2025, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பெரும் பங்காற்ற வேண்டும்; முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்!

Web Desk by Web Desk
Aug 19, 2023, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூகத்தை உருவாக்குவதில் இளைஞர்களாக, இராமராக இருந்தாலும் சரி, கிருஷ்ணராக இருந்தாலும் சரி, சங்கராச்சாரியாராக இருந்தாலும் அல்லது விவேகானந்தராக இருந்தாலும் சரி, நம்முடைய நாட்டிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

ஜி20ன் ருத்ராக்ஷ் சர்வதேச மாநாடு (Y20) நேற்று (18.08.2023) தொடங்கியது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பங்களிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார்.

“ஜி-20 ருத்ராக்ஷ் சர்வதேச மாநாடுக்கு உ.பி.க்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாடு உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

இந்தியாவில் நான்கு இடத்தில் மடங்கள் அமைத்து தேசத்தை ஒருங்கிணைக்க பெரும் பங்காற்றிய, ஆதிசங்கரர் வெறும் 32 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தார். உலக அரங்கில் இந்தியாவை கௌரவித்த சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான். சுவாமி பிரணவானந்தாவின் ஆயுட்காலம் 42 ஆண்டுகள் மட்டுமே.

இந்தியாவின் சுதந்திரத்தில் முக்கியப் பங்கு வகித்த குரு கோவிந்த் சிங், மகாராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி போன்றவர்களும் இளைஞர்கள் தான். காசியைச் சேர்ந்த ராணி லக்ஷ்மிபாய் 23 வயதில் தான், ஜான்சியின் சுதந்திரத்திற்காகப் போராடினார்.

“நீங்கள் எனக்கு இரத்தத்தைக் கொடுங்கள், நான் உங்களுக்குச் சுதந்திரம் தருகிறேன்” என்ற பிரகடனத்தால் புகழ்பெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸும் இளைஞர்களான சந்திரசேகர் ஆசாத், ராம் பிரசாத் பிஸ்மில், சுக்தேவ், ராஜ்குரு, அஷ்பக் உல்லா கான், தாக்கூர் ரோஷன் சிங் ஒருங்கிணைத்து புரட்சி செய்தார்.

மேலும், “விநாயக் தாமோதர் சாவர்க்கருக்கு 28 வயதில் தான் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதிகாசத்தில் 16 வயது அபிமன்யூ வீரத்தை பற்றி மஹாபாரதம் விவரிக்கும். மற்றொரு உதாரணம் லூயிஸ் பிரெய்லி. தனது 15 வயதில் பார்வையற்றவர்களுக்காக பிரெய்ல் எழுத்தினை வடிவமைத்தார். ஐன்ஸ்டீன் தனது 16-வது வயதில் சார்பியல் கோட்பாட்டை உருவாக்கினார். அதேபோல் நியூட்டன் தனது 23-வது வயதில் புவியீர்ப்புக் கோட்பாட்டைக் கண்டுபிடித்தார்.

“மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை என்ற மூன்று ‘திரிவேணி’ நம்மை தனித்துவமாக்குகிறது. ஜி-20 நிகழ்விற்கு நம் நாடு தற்போது தலைமை வகித்து வருகிறது. உலக அரங்கில் வளர்ந்து வரும் ஒரு தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.”

காசி விஸ்வநாதரின் புனித தலமாகவும், ஆன்மிகத் தத்துவம், கல்வி, இலக்கியம் மற்றும் கலைக்கு பெயர் பெற்றதாக உத்தர பிரதேசம் உள்ளது. அதே சமயத்தில் புத்தர், பௌத்த மத்தின் முதல் பிரசங்கத்தை சாரநாத்தில் வழங்கினார். அதனால் பௌத்த மதத்தினருக்கும் புனித தலமாக உத்தர பிரதேசம் உள்ளது.

ஜி-20 மாநாட்டின் கருப்பொருள் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்பது. இது இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது, இந்தியா ‘வசுதைவ குடும்பகம்’ (‘உலகம் ஒரே குடும்பம்’) என்ற நோக்கத்தில் பயணிக்கும் தேசம்.

நாங்கள் எப்போதுமே தாராளவாத உணர்வுகளைக் கொண்டு அதையே பிரதிநிதிப்படுத்துகிறோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

எதிர்கால கொள்கை வகுப்பது இளைஞர்கள், எனவே அவர்களின் பங்கேற்பு நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது. அதனால் தான் கடந்த ஒன்பது ஆண்டுகளில், நரேந்திர மோடி தளமையிலான அரசு புதுமை மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஸ்டாண்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டார்ட்-அப் இந்தியா போன்ற இளைஞர்கள் சார்ந்த பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜி-20 மூன்று கருப்பொருளை கொண்டுள்ளது அதன் இன் கீழ், ஒய்-20 இன் பிரதிநிதிகள் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற செய்தியை வெளிபடுத்தும் உலக இணைப்பு மற்றும் மனிதகுல நலன் சேர்த்து ஐந்து கருப்பொருள்கள் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதை எண்ணி, இந்தியா பெருமைக் கொள்கிறது.” என்றுத தெரிவித்தார்.

Tags: Cm Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

ஈரான் அதிபர் சையத் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர்  நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார்

Next Post

மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்கு 8000 கன அடி நீர் திறப்பு.

Related News

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்!

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

புவனகிரி அருகே அவதார் இல்லத்தில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் – சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு கேபிளில் இருந்து புதிய  தலைமுறை டிவி முடக்கம் – அண்ணாமலை கண்டனம்!

முதல்வர் தொகுதியில் தூய்மைப் பணி ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

இன்னும் எத்தனை உயிர்களை பறித்தால் திமுக அரசின் தாகம் தீரும்? – நயினார் நாகேந்திரன்

முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக நிர்வாகிகள் நேரில் ஆறுதல்!

ஆன்மீக விழிப்புணர்வு வாயிலாக மட்டுமே சமூகத்தில் நிலவும் தீமைகளைக் களையமுடியும் என்பதை உணர்த்தியவர் வள்ளலார் – அண்ணாமலை

சமரச சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றும் லட்சக்கணக்கான மக்களுக்கு வள்ளலார் ஞானகுரு – நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies