நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகள் சாதனைகளைத், தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லும், ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தைப் பாஜக மாநிலத் தலைவர் தலைவர் K.அண்ணாமலை, கடந்த ஒரு மாத காலமாக, தென் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில், மக்களைச் சந்தித்து வருகிறார்.
மக்களின் பேராதரவோடு ‘என் மண் என் மக்கள்’ முதல் கட்டப் பயணம் மாபெரும் வெற்றி அடைந்தநிலையில், அதன் இரண்டாம் கட்ட பாதயாத்திரையின் பயண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் இரண்டாம் கட்ட “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை செப்டம்பர் 3-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. யாத்திரை வருகின்ற 22 ஆம் தேதி திருநெல்வேலியில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் நடைப்பயணத்தில் பங்கேற்று, திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.
செப்டம்பர் 3-ம் தேதி காலை
ஆலங்குளம், மாலை தென்காசி,
செப்டம்பர் 4-ம் தேதி காலை
கடையநல்லூர், மாலை வாசுதேவநல்லூர்,
செப்டம்பர் 5-ம் தேதி காலை ராஜபாளையம், மாலை ஸ்ரீவில்லிபுத்தூர்,
செப்டம்பர் 6-ம் தேதி மாலை
சங்கரன்கோவில்,
செப்டம்பர் 7-ம் தேதி காலை உசிலம்பட்டி
மாலை ஆண்டிபட்டி,
செப்டம்பர் 8-ம் தேதி காலை கம்பம், மாலை போடிநாயக்கனூர்,
செப்டம்பர் 9-ம் தேதி காலை பெரியகுளம்,
செப்டம்பர் 12-ம் தேதி மாலை நிலக்கோட்டை,
செப்டம்பர் 13-ம் தேதி காலை நத்தம், மாலை திண்டுக்கல்
செப்டம்பர் 14-ம் தேதி காலை ஆத்தூர், மாலை ஒட்டன்சத்திரம்,
செப்டம்பர் 15-ம் தேதி காலை பழனி (கொடைக்கானல்),
செப்டம்பர் 16-ம் தேதி காலை பழனி,
செப்டம்பர் 19-ம் தேதி காலை
மடத்துக்குளம், மாலை வால்பாறை
செப்டம்பர் 20-ம் தேதி காலை உடுமலைப்பேட்டை, மாலை பொள்ளாச்சி
செப்டம்பர் 21-ம் தேதி காலை கிணத்துகடவு, மாலை தொண்டாமுத்தூர்,
செப்டம்பர் 22-ம் தேதி காலை சூலூர்,
மாலை கவுண்டம்பாளையம்,
செப்டம்பர் 23-ம் தேதி காலை
கோயம்புத்தூர் வடக்கு/தெற்கு
செப்டம்பர் 24-ம் தேதி காலை கூடலூர்,
மாலை ஊட்டி,
செப்டம்பர் 25- ம் தேதி காலை குன்னூர்,
மாலை மேட்டுப்பாளையம்,
செப்டம்பர் 26-ம் தேதி காலை பவானிசாகர், மாலை அவினாசி,
செப்டம்பர் 27- ம் தேதி மாலை
சிங்கநல்லூர், ஆகிய நாட்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணம் மேற்கொள்கிறார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் இரண்டாம் கட்ட என் மண் என் மக்கள் பாதயாத்திரை, குறித்து இன்று செய்தியாளரிடம் பேசிய பொறுப்பாளர் K.S.நரேந்திரன், தொடர்ந்து உங்கள் நல் ஆதரவை வழங்கி, ‘என்
மண் என் மக்கள்’ நடைபயணத்தை வெற்றியடையச் செய்யுமாறு மக்களைக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்
செய்தியாளர் சந்திப்பின் போது, இணைப் பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி, மாவட்ட தலைவர் தயா சங்கர் ஆகியோர் உடனிருந்தனர் .