உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தி இராம ஜென்ம பூமியில் சுவாமி தரிசனம் செய்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி பகவான் ஸ்ரீஇராமர் கோவிலுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதன் பிறகு, கோவில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி இக்கோயில் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகமும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று அயோத்திக்குச் சென்றார், இராம ஜென்ம பூமியில், பகவான் ஸ்ரீஇராமருக்கு அபிஷேக ஆராதனை செய்து சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தவர், அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டுத் தெரிந்துகொண்டார். இதன் பிறகு, சுமார் 2 மணிநேரம் அயோத்தியில் இருந்த யோகி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிறகு, மீண்டும் லக்னோ புறப்பட்டுச் சென்றார்.
இன்று மாலை 7 மணியளவில் தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து, இருவரும் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் திரைப்பட்டதின் சிறப்புக் காட்சியை பார்வையிடுகின்றனர்.