ஊழல் எப்படிச் செய்யலாம் என்பதில்தான் திமுகவின் முழுக் கவனமும் இருக்கிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு!
Nov 15, 2025, 05:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் எப்படிச் செய்யலாம் என்பதில்தான் திமுகவின் முழுக் கவனமும் இருக்கிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Aug 21, 2023, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தலில் வெற்றி பெற 505 பொய் வாக்குறுதிகள் கொடுத்த திமுக, அவற்றில் 5 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரியில் என் மண் என் மக்கள் பயணம், மிகச் சிறப்பாக நடந்தேறியது. நாங்குநேரி மக்களின் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காக, நாங்குநேரி ஜீயர் அவர்கள், சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) அமைக்க 2,000 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கிடைத்தும், இன்னும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் வைத்திருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டிலுள்ள பின் தங்கிய பகுதிகளைப்  முன்னேற்ற அறிவித்திருக்கும் Aspirational Blocks திட்டத்தில் நாங்குநேரியும் தேர்வாகியுள்ளது. சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, உட்கட்டமைப்பு என அனைத்து துறைகளிலும் நாங்குநேரியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மோடியின் முகவரி: நாங்குநேரி

முத்ரா கடனுதவியின் மூலம் தொழிலதிபரான திரு ஜானகிராமன், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு பெற்ற திருமதி இசக்கியம்மாள், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற்ற ஆட்டோ ஓட்டுநர் திரு முத்துப்பட்டு, பிரதமரின் பயிர் காப்பீடு… pic.twitter.com/PcMWqNiKf0

— K.Annamalai (@annamalai_k) August 21, 2023

 

மோடியின் முகவரி: நாங்குநேரி

முத்ரா கடனுதவியின் மூலம் தொழிலதிபரான ஜானகிராமன், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு பெற்ற திருமதி இசக்கியம்மாள், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற்ற ஆட்டோ ஓட்டுநர் முத்துப்பட்டு, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பலனடைந்த விவசாயி திரு குப்புசாமி, பிரதமரின் சிறுகுறு உணவு பதப்படுத்துதல் திட்டத்தின் கீழ் மாவு இயந்திரம் பெற்று தொழில் செய்யும் ராமர், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பலனடைந்த சந்தனமாரி. இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடியின் முகவரி.

பட்டியல் சமூக மக்களை வஞ்சிப்பது திமுகவுக்குப் புதிதல்ல. திமுகவில் அமைச்சராக இருந்த சத்தியவாணி முத்து அவர்கள், “ஒடுக்கப்பட்ட மக்களைக்  கருணாநிதி வஞ்சிக்கிறார்” என்று கூறி, திமுகவில் இருந்தே வெளியேறினார்.

மத்திய அரசு பட்டியல் சமூக மக்களுக்காக வழங்கும் SCSP நிதியில், 10,466 கோடி செலவிடாமல் வீணடித்தது திமுக. இந்த ஆண்டு நிதியால் 1,600 கோடியை, மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றியுள்ளது. திமுகவின் சமூக நீதி, சமத்துவம் எல்லாம் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்காகத்தான்.

தென்மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்களுக்குத் திமுகதான் காரணம். இன்றைய சபாநாயகர் அப்பாவுவே,” ஜாதியை வளர்த்து, ஜாதிக் கலவரங்களைத் திட்டமிட்டு உருவாக்கியதே கருணாநிதிதான்” என்று கூறியிருக்கிறார். தமிழகத்தில் நடக்கும் ஜாதிப் பிரச்சினைகளுக்குத்  திமுக தான் காரணம்.

தேர்தலில் வெற்றி பெற 505 பொய் வாக்குறுதிகள் கொடுத்த திமுக, அவற்றில் 5 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. எப்படி ஊழல் செய்வது என்பதில்தான் திமுகவின் முழுக் கவனமும் இருக்கிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், ஊழலின் மொத்த வடிவமான, மக்களை ஜாதியின் பெயரால் பிரித்து அரசியல் செய்யும் திமுக கூட்டணியை முழுமையாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியைத் தொடரச் செய்வோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: annamalai bjpannamalai en maan en makkal
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Next Post

உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை – காவல்துறை எச்சரிக்கை

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies