உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு வசிக்கும் மக்களை ஆற்றங்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று உத்தரகண்ட் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
உத்தரகண்ட் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக சமோலி பகுதியில் உள்ள பிண்டார் ஆற்றின் நீரளவு அதிகரித்தது. இதனால் அங்குத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது .
இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்கவேண்டும் என்றும் ஆற்றின் அருகில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவேண்டும் என்றும் சமோலி காவத்துறையினர் சமூக வலைத்தளமான எக்ஸில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ஒருவர் ஆற்றில் விழும் வீடியோ காட்சிகளையும் பதிவிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கனமழைக் காரணமாக பிண்டார் ஆற்றின் நீர் அளவு அதிகரித்தது. கனமழைக் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் ஏற்கனவே 52 பேர் காயமடைத்ததைத் தொடர்ந்து தற்போது 37 பேர் காயமடைந்தாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
जनहित में जारी।
पहाड़ों में हो रही बारिश के कारण नदियों का जलस्तर लगातार बढ़ा है। जिससे नदी किनारे वाले स्थानों पर लगातार भूस्खलन हो रहा है। चमोली पुलिस का आप से निवेदन है कि ऐसे स्थानों पर जानें से बचें व नदी किनारे रहने वाले लोग सतर्क रहे। pic.twitter.com/x7U6C39DLR
— Chamoli Police Uttarakhand (@chamolipolice) August 21, 2023