திமுக, காங்கிரஸ், அரசியலுக்காக பொய்களை பரப்பி மாணவர்களின் வாழ்வை பலிதரும் அரசியலை செய்வது வெட்கக் கேடானது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில்,
“நீட் தேர்வுதான் சமூகநீதியையும், சமநிலையையும் மருத்துவப் படிப்பில் கொண்டு வந்துள்ளது. இந்த உண்மை ஆழமாக இருப்பதாலேயே உச்சநீதிமன்றம் வரை இந்த தேர்வுமுறை சரி என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்தத் தேர்வு ஏழை – எளிய, பின்தங்கிய சமூகங்களுக்கு மருத்துவப்படிப்பை உறுதி செய்துள்ளது. நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றிய காங்கிரஸ் – திமுகவே, இன்று அரசியலுக்காக பொய்களைப் பரப்பி மாணவர்களின் வாழ்வை பலிதரும் அரசியலை செய்வது வெட்கக் கேடானது.
இதை நிறுத்தவில்லை என்றால் மக்களால் முழுதாக புறக்கணிக்கப்படுவார்கள். நீட் தேர்வு 21 – 10 – 2010 முதல் நடைமுறைக்கு வந்தது. அதை நடைமுறைப்படுத்தியது காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த திமுகவின் அமைச்சர் காந்தி செல்வன்தான். நீட் தேர்வினால் யாருக்கும் பாதிப்பில்லை. தமிழக மாணவர்கள் 85% இடங்களை நிரப்புகிறார்கள். அதில் 69% இடஒதுக்கீடு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. மீதமுள்ள 15% இடத்தை AIQ வழியாக பிற மாநில மருத்துவ இடங்களையும் கைப்பற்றுகிறார்கள்.
இதில் நமது மாநில மாணவர்களுக்கோ, மாநிலத்தில் கடைபிடிக்கப்படும் பிரத்யேக இடஒதுக்கீட்டு முறைக்கோ எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் முன்பை விட அதிக வாய்ப்புகளை மாணவர்கள் இப்போதுதான் பெறுகிறார்கள். தமிழகத்தில் நிலவி வரும் 69% இடஒதுக்கீட்டினை இதுவரை பின்பற்றாத CMC போன்ற மருத்துவக் கல்லூரிகளில் கூட 50:50 என்ற முறையில் இடங்களை அனைத்து பிரிவினருக்கும் ஒதுக்கும் விதம் சமூகநீதியை நிலைநாட்டியது நீட் தேர்வுதான்.
DMK’s NEET fasting Drama comes to an end today.
Now, Let’s look at DMK’s double standards, how their former Health minister sold the merit list to Private medical colleges in exchange for money & and how, after NEET, students from every section of society have received an equal… pic.twitter.com/9zoCnLmYaX
— K.Annamalai (@annamalai_k) August 20, 2023
2011வது ஆண்டில் திமுக ஆட்சி முடிகிற போது தமிழகத்தில் இருந்த மருத்துவ இடங்கள் மொத்தம் 1945 மட்டுமேதான். தற்போது 8480 இடங்கள் கடந்த 11 வருடத்தில் அதிகமாகி 10425 மருத்துவ இடங்களாக மாறியிருப்பதற்கு ஒரே காரணம் பிரதமர் மோடி மட்டுமே.
இப்படி இடஒதுக்கீடு – மாநில நலன் – சரிவிகித வாய்ப்புகளை வழங்கும் நீட்தேர்வினை திமுக எதிர்க்க ஒரே காரணம், அவர்களது கட்சியினர் நடத்தும் தனியார் கல்லூரிகளின் கல்லா நிரம்பவில்லை என்பதே.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசிடம் ஒப்படைக்கும் 50% இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுக் கல்லூரியில் வாங்கும் கட்டணத்தையே அளவீடாக வைக்க வேண்டும் என ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய மோடி அரசின் மீது திராவிட மாடலுக்கு எரிச்சல் வருவது இயல்பே” எனக் குறிப்பிட்டுள்ளார்.