திருநெல்வேலியில் உள்ள விஞ்சை விலாஸ் உணவகம் நூறு ஆண்டுகளுக்கு சிறப்புடன் செயல்பட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில், திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற, ‘விஞ்சை விலாஸ்’ உணவகத்தில் இன்று, பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரனுடன் சென்று, காலை உணவு உண்ணும் வாய்ப்பு கிடைத்தது.
திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற, ‘விஞ்சை விலாஸ்’ உணவகத்தில் இன்று, @BJP4Tamilnadu மாநிலத் துணைத்தலைவர் அண்ணன் திரு @nainarBJP அவர்களுடன் சென்று, காலை உணவு உண்ணும் வாய்ப்பு கிடைத்தது.
1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகம், நூறு ஆண்டுகளாக, தரத்திலும், சுவையிலும் சமரசம்… pic.twitter.com/bZN59jrVq5
— K.Annamalai (@annamalai_k) August 22, 2023
1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உணவகம், நூறு ஆண்டுகளாக, தரத்திலும், சுவையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பது மிகவும் சிறப்புக்குரியது. இங்குள்ள அனைத்து உணவுகளும் பழமை மாறாமல், வீட்டில் செய்யப்படும் முறையிலேயே செய்வதால், இத்தனை ஆண்டுகளாக பொதுமக்கள் ஆதரவைத் தொடர்ந்து பெற்று வருகிறது.
மேலும் பல நூறு ஆண்டுகள் இந்த உணவகம் சிறப்புடன் செயல்பட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.