பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை வெல்வாரா?
Jan 24, 2026, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரக்ஞானந்தா செஸ் உலகக்கோப்பை வெல்வாரா?

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 11:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஸ் உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி கடந்த இரண்டு நாட்களாக நடைபெறுகிறது.

இறுதி போட்டியில் உலகில் நம்பர் 1 செஸ் போட்டியாளரான மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா விளையாடி வருகிறார்கள். இதில் முதலாம் சுற்று டிராவில் முடிவடைந்த நிலையில் நேற்று இரண்டாம் சுற்றில் யார் வெற்றிபெறுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் – பிரக்ஞானந்தா இடையிலான இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிவடைந்தது.

வெள்ளை காய்களுடன் ஆடிய கார்ல்சனுக்கு பிரக்ஞானந்தாவை அட்டாக் செய்வதற்கான சாதகங்கள் அமைந்திருந்தும், தொடக்கம் முதலே டிராவுக்காகவே ஆடிக்கொண்டிருந்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போட்டி, கடைசியில் டிராவில் முடிந்தது.

போட்டிக்குப் பின் பிரக்ஞானந்தா , “இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்றில் இவ்வளவு விரைவாக டிராவுக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவரின் நகர்வுகள் டிராவுக்கானதாக இருந்ததை நான் அறிந்துகொண்டேன். எனக்கும் அது சரியென்று தோன்றியது. ஏனென்றால் தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வருகிறேன். இருந்தாலும் நாளை ஒட்டுமொத்தமாக வெற்றிக்காக விளையாட போகிறேன்.

கார்ல்சனும் விளையாடும் போது சற்று உடல் சோர்வுடனே காணப்பட்டார். நிச்சயம் டை பிரேக்கர் சுற்றுகள் சிறிய ஆட்டமாக இருந்தாலும், அதிகப்படியான ஆட்டங்கள் நடக்கும் என்று நினைக்கிறேன். அதனால் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்நிலையில் இன்று மூன்றாவது சுற்று நடைபெறுகிறது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலமாக சர்வதேச கவனத்தைத் தன்பக்கம் திருப்பியுள்ளார் பிரக்ஞானந்தா.

20 ஆண்டுகளுக்குப் பின் செஸ் உலகக்கோப்பையை வெல்லும் இந்திய வீரர் என்ற சாதனையைப்  பிரக்ஞானந்தா படைப்பார் என்று இந்தியாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

Tags: chessPragyananda Chess
ShareTweetSendShare
Previous Post

கிடுகிடு என உயர்ந்த பூக்களின் விலை – என்ன காரணம்

Next Post

தாயைப் பராமரிக்கத் தவறிய மகன்: கலெக்டர் கொடுத்த நூதன தண்டனை!

Related News

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜப்பான் பிரதமர்!

கேரள சட்டப்பேரவை தேர்தல் – ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்!

நெட் ஃபிக்ஸால் தென்கொரியாவில் எகிறிய நூடுல்ஸ் ஏற்றுமதி!

டிரம்ப் முன்னிலையில் சுவிட்சர்லாந்தின் நடந்த சம்பவம் – கையெழுத்திட்ட உலக நாடுகள்!

திடீரென தீப்பற்றி எரிந்த ஓலா இ-ஸ்கூட்டர் – உயிர் தப்பிய தந்தை, மகன்

ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் உட்பட 15 பேர் சுட்டுக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ் திரைப்படம்!

பட்டப்பகலில் இளைஞரை கடத்தி சென்ற கும்பல்!

தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாட்டு பயணம் – விதிகளை எளிதாக்கி புதிய உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் – இந்தியா அபார வெற்றி!

வங்கதேசத்தை முகமுது யூனுஸ் சீரழித்துவிட்டார் – ஷேக் ஹசீனா

ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சுட்டுக் கொலை!

கோவையில் வாகன உதிரிபாக விற்பனையகத்தில் தீ விபத்து!

குடியரசு தின விழா கொண்டாட்டம் – சென்னை மெரினாவில் போக்குவரத்து மாற்றம்!

குடியரசு தின விழா கொண்டாட்டம் – மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies