மதுரை அருகே லக்னோ – ராமேஸ்வரம் ரயிலில் இன்று தீ பற்றி எரிந்ததில் 9 பேர் பரிதாபமாக பலியானார்கள். 25 பேர் படுகாயமடைந்தனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள இராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று அதிகாலை மதுரை வந்தடைந்தது. இந்த நிலையில், அதிகாலையில் 5 மணி அளவில் இராமேஸ்வரம் நோக்கி புறப்பட்டுள்ளது. அப்போது, அதிகாலை 5.30மணி அளவில் இரயிலில் உள்ள சமையல் கோச்சில் யாரும் எதிர்பாராத வகையில் சிலிண்டர் வெடித்துச் சிதறியுள்ளது. இதில், இரயில் பயணம் செய்த 9 பேர் பலியானார்கள். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இரயில் பெட்டில் 60-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகவும், ரயில் கதவுகள் பூட்டப்பட்டு இருந்ததால், அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை என்றும், இதனாலே, 9 பேர் பலியானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.