கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர்; 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வயநாடு மாவட்டத்தின் தாலபூழா பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஜீப்பில் மொத்தம் 14 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் ஓட்டுநர் நீங்கலாக 13 பேர் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். வளைவு ஒன்றில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சுமார் 25 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிற்பகல் 3.30 மணி அளவில் விபத்து நடந்துள்ளது. ஜீப் கவிழ்ந்த வேகத்தில் இரண்டாக உடைந்து விபத்து ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய பெண்கள் அனைவரும் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தமிழர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 5 பேருக்கு முறையான சிகிச்சை வழங்க
கேரளா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.