கேரளா ஜீப் விபத்தில் பலியான 9 நபர்களின் குடும்பத்தினருக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தமிழ்ச் சகோதரிகள் ஒன்பது பேர் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு, @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத்…
— K.Annamalai (@annamalai_k) August 25, 2023
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தமிழ்ச் சகோதரிகள் ஒன்பது பேர் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்கள் குடும்பத்தினருக்கு, தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.
விபத்தில் காயமுற்றவர்கள் விரைவாக நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க, கேரள அரசிடம் வலியுறுத்துமாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கேட்டுக் கொண்டுள்ளார்.