பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் உறுதி!
Aug 19, 2025, 04:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: நிர்மலா சீதாராமன் உறுதி!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

ஜி20 அமைப்பு கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, துருக்கி, தென்னாப்பிரிக்கா, சவூதி அரேபியா, தென்கொரியா, மெக்ஸிகோ, இத்தாலி, இந்தோனேஸியா, பிரேஸில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் மாறுகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனிடையே, ஜி20 அமைப்பின் வணிக பிரிவான பி20 கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசுகையில், “முதல் காலாண்டிற்கான ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த மாதம் வெளியிடப்படும். அதன்படி, வரும் 31-ம் தேதி தேசிய புள்ளியியல் அலுவலகம் ஜி.டி.பி. விபரத்தை வெளியிட உள்ளது. கடந்த ஜூலையில் சில்லரை விலை பணவீக்கம், 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு, தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை அதிகரித்ததுதான் காரணம்.

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதே அரசின் முதன்மையான நடவடிக்கை. அதற்காக, வட்டி விகிதங்களை உயர்த்துவது மட்டுமே தீர்வாக அமையாது. பல வழிமுறைகளில் பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது. ஆகவே, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாக கருதப்படும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தின் ஒவ்வொரு அங்கமும் சிறப்பான அளவில் வளர்ந்து வருகிறது” என்றார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான் நிலவில் தடம் பதித்த இடம்: “திரங்கா, சிவசக்தி” பெயர் சூட்டிய பிரதமர் மோடி!

Next Post

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு – சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை

Related News

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies