GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியாகி உள்ள நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி மற்றும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுகலை பட்ட படிப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சேர்வதற்கான GATE நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது.
தகுதியுள்ள மாணவர்கள் http://gate2024.iisc.ac.in என்ற இணையதளம் சென்று விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து தேவைப்படும் தகவல்களைப் பூர்த்திச் செய்து அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஐஐடி மற்றும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதல்நிலை படிப்பில் சேர்தற்கு விண்ணப்பிக்கும் கேட் தேர்வுக்கு செப்டம்பர் 29ஆம் தேதி கடைசி தேதி என்றும் அதற்குள் விருப்பமுள்ள மாணவர்கள் மேற்கண்ட இணையத் தளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/என்ற வலைதளத்தில் அறியலாம்.
மேலும் இது குறித்து முழு தகவல்களையும் மேற்கண்ட இணையதளங்களில் பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.