அமெரிக்க காவல்துறையினர் எடுத்த மக்-ஷாட் புகைப்படத்தில் டொனால்டு ட்ரம்ப் அழகாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு தெற்கு மாகாணமான ஜார்ஜியாவின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதற்காக, தேர்தல் மோசடி குற்றச்சாட்டின் பேரில் அட்லாண்டா கோர்ட்டில் டொனால்டு ட்ரம்ப் கைது செய்யப்பட்டார். இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் உத்தரவாதத்தின் பேரில் காவலர்கள் சில நிமிடங்களில் ட்ரம்ப்பை பிணையில் விடுவித்தனர். ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் ட்ரம்ப் 13 குற்றச் செயல்களை எதிர்கொள்கிறார். இதே தேர்தல் மோசடியில் இதுவரை 18 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது கைது குறித்து-வெளியிட்டுள்ள பதிவில், “இது அமெரிக்காவில் இன்னொரு சோகமான நாள்!” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னை காவலர்கள் எடுத்த ‘மக்-ஷாட்’ புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாக பரவியது.
இந்த புகைப்படம் பரவலாக பேசப்பட்டது. இது குறித்து அமெரிக்க அதிபரிடம் கருத்து கேட்கப்பட்டது, “ட்ரம்ப்பின் புகைப்படம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதற்கு, ” ட்ரம்ப் மிகவும் அழகான நபர்” என்று பதிலளித்துவிட்டு சென்றார்.
https://t.co/MlIKklPSJT pic.twitter.com/Mcbf2xozsY
— Donald J. Trump (@realDonaldTrump) August 25, 2023