மதுரை இரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
மதுரை இரயில் நிலையத்தில், இரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பத்து பேர் பலியான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜகச் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை ரயில் நிலையத்தில், ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பத்து பேர் பலியான செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு @BJP4Tamilnadu சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில்…
— K.Annamalai (@annamalai_k) August 26, 2023
விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சை வழங்க தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.