டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஊழல் தடுப்பு: ஆளுநர் பெருமிதம்!
Aug 26, 2026, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஊழல் தடுப்பு: ஆளுநர் பெருமிதம்!

சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் ஊழல் தடுக்கப்பட்டிருக்கிறது என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார்.

திருச்சி இந்திய மேலாண்மைக் கழகத்தில் (ஐ.ஐ.எம்.) தலைமைத்துவம் குறித்த கருத்தரங்கு இன்று நடைபெற்றது. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் தலைமைத்துவத்துடன் சிறந்து விளங்குவதற்குத் தேவைப்படும் புதிய திறன்கள் மற்றும் பரிணாமங்கள் குறித்த கருப்பொருளில் இக்கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “சிறந்த தலைவர்கள் மாற்றத்திற்காக காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

இந்தியாவில் ஊழல் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரு ரூபாய் அரசு ஒதுக்கினால், பயனாளிகளுக்கு 15 பைசா மட்டும்தான் சென்றடைகிறது. மீதமுள்ள 85 பைசாவை ஊழல் செய்கிறார்கள். இதற்கான தீர்வாகத்தான் ‘டிஜிட்டல் இந்தியா’ கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் 5 மில்லியன் ஜந்தன் வங்கிக் கணக்குகள் உள்ளன. இதில் 56 சதவிகிதம் பேர் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் சென்றுவிடுவதால், இடையில் இருப்பவர்கள் முறைகேடு செய்ய முடிவதில்லை.

முத்ரா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 27 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பலரும் தொழில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை தீட்டி செயல்படுகிறது. இதனால்தான் பல மருத்துவமனைகள், சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு நாடு மேம்பாடு அடைகிறது. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில், தமிழகத்தில் பள்ளிக்கல்வி படிக்கும் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒரு மாணவர், சூரியசக்தி மூலம் இஸ்திரி செய்யும் பெட்டியை கண்டுபிடித்திருக்கிறார். இதன் மூலம், பல டன் கரி சேமிக்கப்படும். சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும். அந்த மாணவனை நான் பாராட்டினேன். இதேபோல மாணவர்கள் புதுப்புது கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

Tags: governor ravi
Share
Tweet
SendShare
Previous Post

விண்வெளித் துறைக்கு பிரதமர் மோடி புதிய உத்வேகம்: அமித்ஷா புகழாரம்!

Next Post

பஞ்சாப் அரசைக் கலைக்க பரிந்துரை செய்வேன் – ஆளுநர் எச்சரிக்கை!

Related News

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies