4×400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய ஆடவர் அணி வீரர்கள் 2.59.05 நிமிடங்களில் இலக்கை கடந்து, மூன்று நிமிடங்களுக்குள் இலக்கை அடைந்த ஆசிய அணி என்ற சாதனையுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடுாபெஸ்டில் 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆடவருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்ட பிரிவுக்கான தகுதிச்சுற்று போட்டி கடந்த வியாழன் அன்று நடைபெற்றது. இதில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய ஆடவர் அணி வீரர்கள் 2.59.05 நிமிடங்களில் இலக்கை கடந்து மூன்று நிமிடங்களுக்குள் இலக்கை அடைந்த ஆசிய அணி என்ற சாதனையுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
கடந்த ஆண்டு ஓரிகானில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் வைத்திருந்த 2:59.51 என்ற முந்தைய ஆசிய சாதனையை முறியடித்தது. கூடுதலாக, டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் போது முகமது அனஸ், நோவா நிர்மல் டாம், ஆரோக்கியா ராஜீவ் மற்றும் அமோஜ் ஜேக்கப் ஆகியோர் முன்பு வைத்திருந்த 3:00.25 என்ற தேசிய சாதனையை இந்திய நால்வர் அணி முறியடித்தது.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் 4×400 தூரத்தை 2.59.05 வினாடிகளில் கடந்து இந்திய வீரர்கள் 5ம் இடம் பிடித்துள்ளனர். மேலும் ஐந்தாம் இடம் பிடித்த நம் இந்தியா வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.