ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனுக்கு காயம்!
Jan 14, 2026, 12:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனுக்கு காயம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 29, 2023, 06:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ICC ODI உலகக் கோப்பைப்  போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாத காலம்  மட்டுமே உள்ளநிலையில், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான  க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு  கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் T20 தொடருக்காக  டர்பனில் பயிற்சி மேற்கொண்ட போது மேக்ஸ்வெல்லின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

மேக்ஸ்வெல் தனது கணுக்கால் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய தேர்வாளர் டோனி டோட்மைட், “போட்டிக்குத் தயாராகும் வீரர்கள்  உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையான அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், 34 வயதான மேக்ஸ்வெல்லின் உடற்தகுதிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும்” கூறியுள்ளார்.

இந்நிலையில், மேத்தியூ வேட் மாற்று வீரராக செயல்படுவார் என்றும் அறிவித்துள்ள ஆஸ்திரேலிய வாரியம் மேக்ஸ்வெல் எப்போது குணமடைவார்? என்பதை மருத்துவ முடிவுகள் தான் தெரிவிக்கும் என கூறியுள்ளது.

அதற்கு முன்பாக சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆஷஸ் தொடரில் ஸ்டீவ் ஸ்மித், மிட்சேல் ஸ்டார்க் ஆகிய 2 முக்கிய வீரர்கள் ஏற்கனவே காயத்தைச்  சந்தித்ததால்,  தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் விளையாடமாட்டார்கள் என்று  ஆஸ்திரேலிய வாரியம் அறிவித்திருந்தது.

அதே போலவே கேப்டன் பட் கமின்ஸும் ஆஷஸ் தொடரில் காயத்தால் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் தற்போது மேக்ஸ்வெல் காயமடைந்துள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த 4 வீரர்களுமே உலகக் கோப்பையை வெல்வதற்கு இன்றியமையாதவர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

இருப்பினும் தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்காமல் காயத்திலிருந்து குணமடையும் அவர்கள் அடுத்ததாக நடைபெறும் இந்திய ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அத்தொடரில் அந்த 4 வீரர்களும் முழு உடற்தகுதியுடன் களமிறங்கி உலகக்கோப்பைக்கும் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியா இரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: maxwell australian cricketer
ShareTweetSendShare
Previous Post

ஜன்தன் திட்டம்: பயனாளிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

கிராம மக்களை “குஷி” படுத்தும் பாரத் நெட் – கோவையில் துவக்கம்!

Related News

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies