கோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களும் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் பாரத் நெட் திட்ட சேவை வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்தியாவில், 5ஜி இணைய சேவையைச் செயல்படுத்துவதற்கான சூழல் உருவாக்கித் தரப்படும் என்றும், பாரத் நெட் திட்டம் மூலம் அனைத்து கிராமங்களிலும் இணைய வழி சேவை தொடங்கப்படும் என்றும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், (கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்) அறிவித்திருந்தார்.
குறிப்பாக, கிராமம் தோறும் இணைய வசதி என்ற நோக்கோடு, நாடு முழுவதும் உள்ள கிராமங்கள், கிராம பஞ்சாயத்து, மற்றும் வட்டாரங்களை ஒன்றிணைப்பது, இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் இணைய வசதியை ஆப்டிகல் ஃபைபர் மூலம் வழங்குவது என்றும், அதன்படி சுமார் 6 லட்சம் கிராமங்களுக்கு இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கானப் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகப் பல்வேறு மாநிலங்களில், பாரத் நெட் திட்டம் தொடங்கப்பட்டு, கிராமப்புற மக்களுக்குச் சேவை வழங்கப்பட்டுவருகிறது.
அதன்படி, மத்திய அரசின் உதவியோடு, தமிழகக்தில் உள்ள 12,525 ஊராட்சிகளுக்கு ஓராண்டுக்குள் இணைய வசதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல், கோவை மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளிலும் முழு வீச்சில், பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மின்கம்பங்கள் வழியாக 85 சதவீதமும், தரைவழியாக 15 சதவீதமும் கண்ணாடி இலை இணைப்பு வழங்கப்பட உள்ளது.
பிரதமர் மோடியின் சீரிய வழிகாட்டுதலின் பேரில், ஒவ்வொரு கிராமத்திற்கும், இணைய வசதி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் கிராமப் பொருளாதாரம் வளரும், கிராமத்தில் உள்ளவர்களும், ஏன், குக்கிராமத்தில் உள்ளவர்கள்கூட இணைய வசதியைப் பயன்படுத்தி கல்வி, மருத்துவம், தொலைபேசி சேவை மற்றும் தொலைக்காட்சி வசதி உள்ளிட்டவைகளை பெறமுடியும் என்பதால், இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தை மக்களுக்காக அறிமுகம் செய்த பிரதமர் மோடிக்கு, நாடு முழுவதும் பொது மக்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.