தியாகி நடேசன் நாயக்கர் இல்லத்திலிருந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மண் பெற்றுக் கொண்டார்.
தியாகி நடேசன் நாயக்கர் இல்லத்திலிருந்து மண் பெற்றுக் அண்ணாமலை, இது குறித்து தனது எக்ஸ் பதவில்,
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் அறிவித்துள்ள ‘என் மண் என் தேசம்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, மறைமலைநகர் நின்னக்கரை கிராமத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அமரர் திரு. நடேசன்… pic.twitter.com/rjdYzR8sSB
— K.Annamalai (@annamalai_k) September 1, 2023
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள ‘என் மண் என் தேசம்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக, மறைமலைநகர் நின்னக்கரை கிராமத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி அமரர் நடேசன் நாயக்கர் இல்லத்திற்குச் சென்றிருந்தோம்.
சுதந்திரப் போராட்டத்தில், உப்பு சத்தியாக்கிரகம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை சென்றவர் தியாகி நடேசன் நாயக்கர்.
எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, நேதாஜி அவர்களுடன் நெருங்கிப் பழகியவர். தியாகிகளுக்கான இந்திய அரசின் தாமிரப் பட்டயம் பெற்றவர். தியாகி நடேசன் நாயக்கர் இல்லத்தில் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி. பாரதப் பிரதமரின் என் மண் என் தேசம் இயக்கத்திற்காக, தியாகி நடேசன் நாயக்கர் இல்லத்திலிருந்து மண் பெற்றுக் கொண்டதில் பெருமையடைகிறோம் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் ‘என் மண் என் தேசம்’ என்ற இயக்கம் தொடங்கப்பட உள்ளது. இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 7,500 கலசங்களில் மண்நிரப்பப்பட்டு, அவற்றோடு சேர்த்து மரக்கன்று, செடிகளும் டெல்லிக்கு கொண்டு வரப்படும். அதைக் கொண்டு, தேசிய போர் நினைவுச் சின்னம் அருகே அமுத பூங்கா உருவாக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி 103-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் தொிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.