நரேஷ் கோயல் தலைவர் பதவியில் இருந்து கடந்த மார்ச் மாதம் விலகியதைத் தொடர்ந்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திக் கொண்டது.
கடந்த மே 5-ம் தேதி மும்பையில் நரேஷ் கோயலின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். சி.பி.ஐ. பதிவு செய்த எஃப்.ஐ.ஆர். அடிப்படையில் மோசடி வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. சி.பி.ஐயின் 2 சம்மன்களை ஏற்று அவர் ஆஜராகவில்லை.
இந்நிலையில், கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்த வழக்கில் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.