மயிலாடுதுறை அருள்மிகு ஶ்ரீஅபயாம்பிகை உடனாய ஶ்ரீமயூரநாத சுவாமி திருக்கோவிலில், நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, அஷ்டபந்தன மருந்து வழங்கப்பட்டும், மூன்றாம் கால யாக சாலை சிறப்பு பூஜையும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறையில், புகழ் பெற்ற திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மயிலாடுதுறை ஶ்ரீஅபயாம்பிகை உடனாய ஶ்ரீ மயூரநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில், மூலவாரக மயுரநாதரும், அபயாம்பிகை, அருஞ்சொல் நாயகியும் உள்ளனர். தல விருச்சமாக மாமரம், வன்னி மரம் உள்ளது. சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் புரிகிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 தலங்களில் இது, 102 -வது தலமாக போற்றப்படுகிறது.
இப்படி புகழ் பெற்ற இந்த திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி, ஆகஸ்டம் 31 -ம் தேதி காலை ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம் திருக்கரங்களால் அஷ்டபந்தன மருந்து வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 31-ம் தேதி இரவு ஶ்ரீலஶ்ரீ குருமகா சந்நிதானம், திருமுன்னர் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி, மகா தீபாராதனை உள்ளிட்டவை மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாளை திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.