தேசிய நல்லாசிரியர் விருதுகளை செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!
Sep 23, 2026, 07:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய நல்லாசிரியர் விருதுகளை செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2023, 05:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆசிரியர்களுக்கு 2023-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளை செப்டம்பர் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.

2023ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 75 பேருக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குகிறார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது. அன்று நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தேசிய நல்லாசிரியர் விருதுகளின் நோக்கம், நாட்டில் ஆசிரியர்களின் தனித்துவமான பங்களிப்பைக் கொண்டாடுவதும், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவையின் மூலம், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும். அதோடு மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்திய ஆசிரியர்களைக்  கௌரவிப்பதும் இதன் முக்கிய நோக்கம் ஆகும்.

ஒவ்வொரு விருதுடன் தகுதிச் சான்றிதழ், ரூ. 50,000 ரொக்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை உள்ளடக்கியது. விருது பெறுவோர் பிரதமருடன் உரையாடும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, கடுமையான மற்றும் வெளிப்படையான தேர்வுமுறை மூலம் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்து  தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று தேசிய அளவிலான விழாவுக்கு ஏற்பாடு செய்து விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுமுதல், தேசிய நல்லாசிரியர் விருது, உயர்கல்வித் துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் தேசிய நல்லாசிரியர் விருது பெறுபவர்கள், முனைவர் டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் – அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அலங்காநல்லூர், மாலதி-அரசு மேல்நிலைப் பள்ளி, வீரகேரளம்புதூர்,

உயர்கல்வித் துறையில் தமிழ்நாட்டில் இருந்து விருது பெறுபவர்:

டாக்டர் எஸ்.பிருந்தா- பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி, கோயம்புத்தூர்,

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்திடமிருந்து விருது பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்: எஸ்.சித்திரகுமார் -உதவி பயிற்சி அலுவலர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்)  ஆகியோர் குடியரசுத் தலைவரிடம் விருது பெறயுள்ளனா்.

Tags: President Droupadi Murmunational teacher awards
Share
Tweet
SendShare
Previous Post

மயிலாடுதுறை ஶ்ரீமயூரநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்!

Next Post

தென்னை நார் தொழிலை நசுக்கும் ஊழல் திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies