உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளதற்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் ஃபைனான்ஸ் என்ற நிதி விவகாரங்கள் சார்ந்த இதழ், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி இலக்குகள், செலாவணி ஸ்திரத்தன்மை, வட்டி விகித மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகளில், தங்களது உத்திகளின் மூலம் அடைந்த வெற்றியின் அடிப்படையில் உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில், மிகச்சிறந்த செயல்பாட்டுக்கான ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளார். சக்திகாந்த தாஸை அடுத்து, சுவிட்சர்லாந்து மத்திய வங்கி ஆளுநர், வியட்நாம் மத்திய வங்கித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளதற்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to RBI Governor Shri Shaktikanta Das. This is a proud moment for India, reflecting our financial leadership on the global stage. His dedication and vision continue to strengthen our nation's growth trajectory. https://t.co/MtdmI8La1T
— Narendra Modi (@narendramodi) September 1, 2023
இதுகுறித்து, தனது எக்ஸ் பதிவில், “ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள். இது இந்தியாவிற்குப் பெருமையானத் தருணம், உலக அரங்கில் நமது நிதித் தலைமையைப் பிரதிபலிக்கிறது. உங்களுடைய அர்ப்பணிப்பும், தொலைநோக்குப் பார்வையும் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.