இந்தியா பாகிஸ்தான் ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வுச் செய்தார். பின்பு தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் 4.2 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது.அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. பின்னர் மழை நின்றதால் போட்டி மீண்டும் தொடங்கியது.
4.6 வது ஓவரில் ரோகித் சர்மா 22 பந்துகளில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பாகிஸ்தான் அணியின் வேகபந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் ரோகித் சர்மா போல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.
அடுத்து விராட் கோலி களமிறங்கினார். நீண்டநேரம் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் 4 ரன்களுக்கு விராட் கோலி வெளியேறினார்.பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்களில் ஹரிப் ரவுப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி 11.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மழை நின்றதால் போட்டி மீண்டும் நடைபெற்றது . தொடர்ந்து கில் ஹாரிப் ரவுப் பந்துவீச்சில் 10 ரன்களில் வெளியேறினார் .இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.
அப்போது இஷான் மற்றும் பாண்டியா களமிறங்கினர். இவர்கள் இணைந்து தங்களது அதிரடி ஆட்டத்தை காண்பிக்க இந்திய அணியின் ஸ்கோர் 200 ராக உயர்ந்தது. பிறகு இஷான் கிஷன் 38 வது ஓவரில் 82(82) ரன்களுக்கு ஹரிஸ் ரவூப் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஹர்டிக் பாண்டியா 43 வது ஓவரில் 87(90) ரன்களுக்கு ஷஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு களமிறங்கிய ஜடேஜா, பும்ரா போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க 49 வது ஓவரில் 266 ரன்களுக்கு ஆட்டம் இழத்தது.
முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் மைதானத்தில் மழை விடாமல் மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆளுக்கு 1 புள்ளி அளிக்கப்பட்டது.