ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனை ஆய்வுச் செய்ய ஆதித்யா எல்1 எனும் விண்கலம் நேற்று ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து முற்பகல் 11:50 மணிக்கு பிஎஸ்எல்விசி57 ஏவுகணை மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆதித்யா எல்1 நான்கு மாதங்கள் பயணித்து சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் லக்ராஞ்ச்1 (எல்1) பகுதியை அடையும். அங்கிருந்து சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்குகிறது. அங்கிருந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடவுள்ளது.
Aditya-L1 Mission:
The satellite is healthy and operating nominally.The first Earth-bound maneuvre (EBN#1) is performed successfully from ISTRAC, Bengaluru. The new orbit attained is 245km x 22459 km.
The next maneuvre (EBN#2) is scheduled for September 5, 2023, around 03:00… pic.twitter.com/sYxFzJF5Oq
— ISRO (@isro) September 3, 2023
ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டுள்ளது என இஸ்ரோ தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த பதிவில், ஆதித்யா எல் 1 சிறப்பாக செயல்பட்டு வருகிறது, விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக 245 கிமீ x 22459 கிமீ உயர்த்தப்பட்டது.
அடுத்தச் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 5ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.