ரூ.1 லட்சம் கோடி வருவாய்- இந்தியன் இரயில்வே!
Sep 30, 2026, 02:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.1 லட்சம் கோடி வருவாய்- இந்தியன் இரயில்வே!

Murugesan M by Murugesan M
Sep 4, 2023, 11:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஏப்ரல் 1, 2023 முதல் ஆகஸ்ட் 31, 2023 வரை ரயில்வே 634.66 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ. 1 லட்சம் கோடி வருவாயை ஈட்டப்பட்டுள்ளது என இந்தியன் இரயில்வே துறை தெரிவித்துள்ளது.

சரக்கு ஏற்றுதலைப் பொறுத்தவரை, இரயில்வே 2023 ஏப்ரல் 1 முதல் 2023 ஆகஸ்ட் 31 வரை 634.66 மெட்ரிக் டன்களை கையாண்டுள்ளது.  கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 620.88 மெட்ரிக் டன் சரக்குகளை ரயில்வே கொண்டு சென்றுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 13.78 மெட்ரிக் டன் அதிகமாகும்.

வருவாயைப் பொறுத்தவரை இந்த நிதி ஆண்டில் சுமார் ரூ. 1 லட்சம் கோடி வருவாயை இரயில்வே ஈட்டியுள்ளது. இதில் சரக்கு பிரிவு, பயணிகள் பிரிவு மற்றும் பிற முக்கிய வருவாய்கள் அடங்கும்.

கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்துடன் (ஏப்ரல் – ஆகஸ்ட்) ஒப்பிடுகையில் முக்கிய சரக்குகள் ஏற்றிச் செல்லுதல் அதிகரிப்பு குறித்த விவரங்கள்:

•  இந்த ஆண்டு ஏற்றிச் செல்லப்பட்ட இரும்புத் தாது 70.84 மெட்ரிக் டன் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 61.30 மெட்ரிக் டன்னாக இருந்தது.  இந்த ஆண்டு 15.56% அதிகமாகும்.

• எஃகு கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 26.16 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 28.42 மெட்ரிக் டன் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது. இது 8.63% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

• உரம்  கடந்த ஆண்டு 22.25 மெட்ரிக் டன் ஏற்றிச் செல்லப்பட்ட நிலையில் இந்த ஆண்டு –  24.13 மெட்ரிக் டன் கையாளப்பட்டுள்ளது. இது 8.45% வளர்ச்சியைக் காட்டுகிறது.

• கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிலக்கரி 305.39 மெட்ரிக் டன்னும் இந்த ஆண்டு 311.53 மெட்ரிக் டன்னும் இரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

• இரயில் மூலம் வாகனங்கள் கொண்டு செல்லப்படுவது 26% வளர்ச்சியையும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் 24.5% வளர்ச்சியையும் எட்டியுள்ளது.

2023 ஆகஸ்ட்  மாதத்தில் மட்டும்,  இரயில்வே மொத்தத்தில் 126.95 மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இது 2022 ஆகஸ்ட்-ல் 119.33 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது 6.38% வளர்ச்சி  ஆகும்.

இந்திய இரயில்வே இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் அதாவது மாதம் 3 வரை சுமார் 48 சதவீத மூலதன செலவினப் பயன்பாட்டை இதுவரை இல்லாத அளவுக்கு கண்டுள்ளது. ஆகஸ்ட்  வரை இரயில்வே ரூ. 1,15,000 கோடி செலவிட்டுள்ளது.

இந்த முதலீடு புதிய பாதைகள், ஏற்கெனவே உள்ள இரயில் பாதைகளை இரட்டிப்பாக்குதல் மற்றும் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் கணிசமான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

Tags: Indian Railway
Share
Tweet
SendShare
Previous Post

ஆதித்யா எல் 1 சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டுள்ளது – இஸ்ரோ!

Next Post

இராமேஸ்வரத்தில் கடல் உள்வாங்கியது!

Related News

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies