இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு - சிறப்பு தொகுப்பு!
Sep 28, 2026, 08:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 28, 2026, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்யவும், வகுப்பறைகளில் குறிப்பிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு 30 சதவீத வரம்பை விதிக்கவும் வகை செய்யும் புதிய அரசாணைக்கு பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில், அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது அரசியல் செல்வாக்கை அதிகரிக்க பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

குறிப்பாக அந்நாட்டுக் கல்வித்துறையிலும், குடியுரிமை கொள்கைகளிலும் பல்வேறு மற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

கடந்த வாரம் இத்தாலி தலைநகர் ரோமில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பள்ளிகளில், புர்கா மற்றும் நிகாப் அணிய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், வகுப்பறைகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு சட்டப்பூர்வமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளது என்றும், இத்தாலிக்கு வந்து வாழ விரும்புவோர் இத்தாலி மொழியைக் கற்று, அந்நாட்டுச் சட்ட விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த சட்ட முன்மொழிவுக்கு இத்தாலி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த 60 நாட்களுக்குள் இத்தாலி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட பின்னர், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்யவும், வகுப்பறைகளில் குறிப்பிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு 30 சதவீத வரம்பை விதிக்கவும் வகை செய்யும் இந்தப் புதிய அரசாணை, இத்தாலிக்குப் புலம்பெயர்ந்த மாணவர்களிடையே சமூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும், இத்தாலிய மொழித் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

‘தனிமைப்படுத்தப்பட்ட வகுப்பறைகள்’ உருவாவதைத் தடுப்பதற்கும், மாணவர்களுக்குச் சமமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்று பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

இத்தாலி மொழியைச் சமூக ஒருங்கிணைப்புக்கான ஒரு வலுவான கருவியாக மாற்றுவதிலும், மாணவர்கள் பள்ளி வாழ்க்கையில் முழுமையாகப் பங்கேற்பதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜியுசெப் வால்டிடாரா (Giuseppe Valditara) கூறியுள்ளார்

கூடுதல் மொழி ஆதரவு தேவைப்படும் மாணவர்கள் மட்டுமே வகுப்பறைகளில் பெருமளவில் குவிவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் இத்தாலி நாட்டுக் குடியுரிமை இல்லாத மற்றும் கல்வி அல்லது மொழி ரீதியாகச் சமூகத்துடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்படாத குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டுமே இந்த 30 சதவீத வரம்பு பொருந்தும்.

தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை, இத்தாலியில் பிறக்காத அல்லது இத்தாலியக் கல்வி முறையில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முன்பள்ளிப் படிப்பை மேற்கொள்ளாத மாணவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.

உயர்நிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை, இத்தாலியின் தேசியக் கல்வி முறையில் குறைந்தது மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்யாத, இத்தாலி நாட்டுக் குடியுரிமை பெறாத மாணவர்களுக்கு இந்த விதி பொருந்தும்.

எனவே இத்தாலியில் பிறந்த மாணவர்கள் மற்றும் ஏற்கனவே இத்தாலியப் பள்ளி அமைப்பில் போதுமான காலம் பயின்ற மாணவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

மொழித் திறனில் சிரமங்களை எதிர்கொள்ளும் மாணவர்களின் பெற்றோர், இலவச இத்தாலி மொழிப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவார்கள் என்றும் கலந்துகொள்ளத் தவறினால் 1,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப் படும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

பள்ளிகளில் முகம் முழுவதையும் மறைக்கும் வகையிலான புர்கா மற்றும் நிகாப் போன்ற ஆடைகளை அணிவதையும் இந்த அரசாணை தடை செய்கிறது. ஹிஜாப் போன்ற பாரம்பரிய தலைக்கவசங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தச் சட்ட விதிமீறல்களுக்கு 200 முதல் 1,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் முகம் மறைக்கும் ஆடையை அணிந்தவர் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தால், அந்த அபராதம் அவர்களின் பெற்றோருக்கு விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

பிரதமர் ஜார்ஜியா மெலோனி தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பள்ளிப் பிரதிநிதிகள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tags: Italian cabinetPrime Minister Giorgia Meloninew decreewearing burqawearing niqab
Share
Tweet
SendShare
Previous Post

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

Related News

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

உயிரை பணயம் வைத்து கடத்தல்காரர்களை கைது செய்த காவலருக்கு சல்யூட் – நயினார் பாராட்டு!

மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக தோற்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்ய தயாரா?  – உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – இந்தியா அபார வெற்றி!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரகசியமாக நடந்த அறங்காவலர் குழு தேர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம் – பாஜக எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி – சென்னை அண்ணா பல்கலை மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் – முதல்வரின் மதுரை வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies