குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு நடந்த பந்தல்கால் நடும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடப்பாண்டுக்கான தசரா திருவிழா அக்டோபர் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்நிலையில், பந்தல்கால் நடும் நிகழ்ச்சிக்காக, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, முத்தாரம்மன் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பந்தல்கால் ஊர்வலமாக கோயில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் நடப்பட்டது.
















