ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் தனிநபர் டிராப் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை நீரு தண்டா தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் தனிநபர் டிராப் பிரிவில் தங்கம் வென்ற நீரு தண்டா, இந்தப் பிரிவில் ஆசிய விளையாட்டு வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். தகுதிச்சுற்றில் 125-க்கு 118 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த அவர், இறுதிச்சுற்றில் 30 இலக்குகளில் 28-ஐ துல்லியமாகத் தாக்கி தங்கம் வென்றார். ஏற்கனவே அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நிலையில், ஒரே நாளில் இரட்டைப் பதக்கங்களை கைப்பற்றி நீரு தண்டா இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
















