பல்வேறு அரசு அனுமதிகளை பெற்று தருவதாக கூறி தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாகப் பதிவான வழக்கில், சென்னையில் ஐந்து இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்
இந்த வழக்கில் கைதாகியுள்ள அரச குமாரின் மகன்களுக்கு சொந்தமான சென்னை விருகம்பாக்கம் மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் உள்ள இரண்டு இடங்களில் சோதனை நடைபெற்றது
அரசகுமாரின் நண்பரான முத்துக்குமாருடைய நண்பருக்கு சொந்தமான சென்னை ஈசிஆர் உத்தண்டி பகுதியில் உள்ள இடத்திலும் சோதனை நடைபெற்றது
மேலும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் உதவியாளருக்கு சொந்தமான கோடம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட இடங்களிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்
காலை முதலே ஐந்து இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்ற சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது
சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்
















