கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் கைது நடவடிக்கையின்போது தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த சுரேஷ், ராஜேஷ்குமார் உள்ளிட்ட 3 பேர் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு குட்கா கடத்தி வந்தனர். அவர்களை கோவில்பாளையம் போலீஸார் தடுத்த நிறுத்த முற்பட்டனர். அப்போது தப்ப முயன்ற 3 பேரையும் தலைமை காவலர் வேல்முருகன் காரின் மேற்கூரையில் பாய்ந்து பிடித்தபடி சுமார் 40 கிலோமீட்டர் பயணம் செய்தார்.
இதனை அடுத்து அவிநாசி அருகே கார் மடக்கிப் பிடிக்கப்பட்ட நிலையில், சுரேஷ் மற்றும் ராஜேஷ்குமார் தப்பியோட முயன்றுள்ளனர். அப்போது, அவர்களை விரட்டிப் பிடித்தபோது, கீழே விழுந்ததில் இருவருக்கும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
















