உதயநிதியின் பேச்சு தேசவிரோத செயல் என பீகார் முன்னாள் துணை முதல்வர் சுசில் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் அணில் அந்தோனி, “உதயநிதியின் பேச்சு அபாயகரமானது. இது ஒரு மதவாத கருத்து. அவரது பேச்சு தேசவிரோத செயல், அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர் சமூகத்தில் வெறுப்பை பரப்புகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கு இது மற்றுமொரு காரணம். ஆபத்தான, மதவாத, ஊழல் கூட்டணியான இண்டியா கூட்டணியை மக்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீச வேண்டும்” என தெரிவித்துள்ளார்.