மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, பாலாலயம் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
அருள்மிகு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் கடந்த 2009 -ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால், கடந்த 2018-ம் தேதி வீரவசந்த ராயர் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து, சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த திருப் பணிகள் வரும் 2026-ம் ஆண்டுக்குள் நிறைவுபெறும் என திருக்கோவில் நி்ாவாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மகா கும்பாபிஷேகத்தையொட்டி, முதற்கட்டமாக, பாலாலய பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், ராஜகோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய மூன்று கோபுரங்களுக்கும், 9 நிலை கோபுரங்களுக்கும், அம்மன் 7 நிலை கோபுரங்களுக்கும் பாலாலய பூஜைகள் நடைபெற்றது.
பாலாலய சிறப்பு பூஜையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெருந்திரளாக பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.