ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வலுவான தேசத்தையும் சமுதாயத்தையும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்களிப்பைச் செய்கிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
शिक्षक बच्चों में सिर्फ ज्ञान व नैतिक आदर्शों को ही संचारित नहीं करते हैं, बल्कि उन्हें सामर्थ्यवान बनाकर एक सुदृढ़ समाज की संरचना व एक सशक्त राष्ट्र के निर्माण में महत्त्वपूर्ण योगदान देते हैं।
भारतरत्न डॉ. सर्वपल्ली राधाकृष्णन जी की जयंती पर उन्हें नमन करता हूँ और सभी शिक्षकों… pic.twitter.com/9MkaHiijET
— Amit Shah (@AmitShah) September 5, 2023
“ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு அறிவு மற்றும் தார்மீக இலட்சியங்களை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், அவர்கள் வலுவான சமுதாயத்தையும் வலுவான தேசத்தையும் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்களிப்பை செய்கிறார்கள்.
முன்னாள் குடியரசுத் தலைவர், தத்துவஞானி, பாரத ரத்னா விருது பெற்ற டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவரின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 அன்று கொண்டாடப்படுகிறது. கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக ஆசிரியர் தினத்தில் இராதாகிருஷ்ணனனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனுசரிக்கப்படுகிறது.
பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் தலைவணங்கி, அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.