வரும் பாராளுமன்றத் தேர்தலில் சந்தர்ப்பவாத ஊழல் கூட்டணியான இந்தியா கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியைத் தொடரச் செய்வார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழகம் கடந்த 9 ஆண்டுகளில் செய்த வரிபங்களிப்பு 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் தமிழகத்திற்குக் கிடைத்தது 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி என்று பொய் பேசியுள்ளார் திரு முக ஸ்டாலின் அவர்கள்.
தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் கிடைத்தது 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகம்… pic.twitter.com/BDW8UW3xi7
— K.Annamalai (@annamalai_k) September 5, 2023
கணவனும் மனைவியும் சரிசமம் என்பதை உலகுக்கு உணர்த்தும் அற்புதத் திருவடிவம் ஆசீர்வதிக்கும் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர், புளியங்குடியில், இன்றைய ”என் மண் என் மக்கள் பயணம்” பெரும் திரளெனக் கூடியிருந்த பொதுமக்கள் சூழ சிறப்புடன் நடந்தேறியது.
பொதிகையை ஆண்டச் சேர மன்னன் ரவிவர்மன் மகனின் தீரா நோயைக் குணப்படுத்தியச் சக்தி வாய்ந்த கடவுள் அர்த்தநாரீஸ்வரர். பூலித்தேவர், ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடி ஆகியவர்கள் வாழ்ந்த வீரம் செறிந்த மண் வாசுதேவநல்லூர். அவர்கள் வீரத்துக்கு நெற்கட்டும் செவல் நடுகல்லே சாட்சி.
ஒரு காலத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு அதிகமான பாசன நிலங்கள் இருந்த பகுதி, 2006 ஆம் ஆண்டு, கேரள அரசு இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்ததால், இன்று, பாசன நிலங்கள் குறைந்துவிட்டன.
அன்று ஆட்சியில் இருந்த திமுக அதைப் பற்றிக் கவலைப்படாமல் மெத்தனமாக இருந்துவிட்டது. முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை என தமிழக விவசாயிகள் நலனை மொத்தமாக கேரள கம்யூனிஸ்ட்டுகளிடம் அடகு வைத்திருக்கிறார் ஸ்டாலின்.
தமிழகம் கடந்த 9 ஆண்டுகளில் செய்த வரிபங்களிப்பு 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் தமிழகத்திற்குக் கிடைத்தது 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி என்று பொய் பேசியுள்ளார் மு.க. ஸ்டாலின்.
தமிழகத்திற்கு கடந்த 9 ஆண்டுகளில் கிடைத்தது 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய். தமிழகம் செய்த வரி பங்களிப்பை விட இரண்டு மடங்கு அதிகம் திருப்பி கொடுத்துள்ளார் பிரதமர் மோடி.
மோடியின்_முகவரி : வாசுதேவநல்லூர்
தமிழகத்திலுள்ள 4824 தென்னை வளர்ச்சி வாரியங்களில், மத்திய அரசின் நிதி பெற்று, தென்னை விவசாயம் செய்யும் கிருஷ்ணகுமார், முத்ரா திட்டம் மூலம் தொழில்முனைவோராகியிருக்கும் கணேசன், கிஸான் கடனுதவி மூலம் பலனடைந்துள்ள அழகப்பாண்டியன், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பலனடைந்த முத்துமாரி, உஜ்வாலா திட்டம் மூலம் இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற திருமதி அழகுரத்னம். இவர்கள்தான் பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முகவரி.
ஒரே நாடு ஒரே தேர்தலைப் பற்றி தமிழக அரசியல் தலைவர் ஒருவர் எழுதியிருக்கிறார். “அடிக்கடி தேர்தலைச் சந்திக்கும் தொல்லையிலிருந்து மக்களைத் தவிர்ப்பதற்காகவும், நிர்வாகம் தடங்கலின்றி நடைபெற்று மக்களின் நன்மைகளில் நாட்டம் செலுத்தவும், பொதுப்பணம் விரயமாவதைத் தடுப்பதற்காகவும், நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி, பஞ்சாயத்து ஆகியவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது சிறந்தது என்று நான் கருதுகிறேன்.”
ஆண்டுதோறும் மக்கள் மாறி மாறி தேர்தல்களைச் சந்திக்கும் நிலையால் ஆட்சி இயந்திரம் சரிவரச் செயல்படாதிருக்கலாம். எடுத்த கொள்கை முடிவுகளை ஆட்சி இயந்திரத்தின் வாயிலாக நிறைவேற்ற முடியாத தேக்க நிலை ஏற்படவும் பொது மக்களுக்கு சங்கடங்களை உருவாக்கவும் வழிவகுக்கும் என்று கருதுகிறேன்” இதைச் சொன்னது கலைஞர் கருணாநிதி.
நெஞ்சுக்கு நீதி – இரண்டாம் பாகம், பக்கம் 271, 272, 273ல் கலைஞர் கருணாநிதி தான் அன்று பத்திரிகையாளர்கள் மற்றும் திமுகவினரிடம் பேசியதைப் பற்றி எழுதியுள்ளார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் “ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்த்து கருத்துக்கள் கூறிக் கொண்டு இருக்கிறார்.
தன் தந்தை எழுதிய சுயசரிதையையே முதலமைச்சர் ஸ்டாலின் படித்ததில்லை என்பது எத்தனை பரிதாபம்? தென்காசி மாவட்டத்திற்கு திமுக கொடுத்த, ‘சங்கரன்கோவிலில் ஜவுளி பூங்கா, தென்காசியில் வேளாண்மையை அடிப்படையாக கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம், தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, தேங்காய் அடிப்படையிலான தொழிற்சாலை, ஆயிரப்பேரியில் வேளாண்மை கல்லூரி, புளியங்குடியில் எலுமிச்சையை அடிப்படையாக கொண்ட தொழிற்சாலை, கடையநல்லூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கால்நடை மருத்துவமனை ‘ என ஒரு தேர்தல் வாக்குறுதியையும் ஊழல் திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.
தென்காசி மாவட்டத்திற்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் திமுகவின் பட்டத்து இளவரசர் தென்காசி வருகிறார். இப்படி எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாமல் வருகிறீர்களே என்று மக்கள் கேட்பார்கள் இல்லையா? அதனால் தான் சனாதன ஒழிப்பு என்று முட்டாள்தனமாக பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இந்து மதத்தை ஒழிப்போம் என்று பேசிய ஒருத்தர் சிவபெருமானுக்காக தென்காசியை உருவாக்கிய பராக்கிரம பாண்டியனின் மண்ணில் வருவது வெட்கக்கேடு. இன்று இந்து மதத்தை ஒழிப்போம் என்று பேசுவார். நாளை கிறிஸ்துவ, இஸ்லாமிய மதத்தை ஒழிப்போம் என்று பேசுவாரா?
வரும் பாராளுமன்றத் தேர்தலில் சந்தர்ப்பவாத ஊழல் கூட்டணியான இந்தியா கூட்டணியை மக்கள் மொத்தமாகப் புறக்கணித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியைத் தொடரச் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை, எனத் தெரிவித்துள்ளார்.