சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு உண்மைகளால் பதிலளிக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார்.
பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைப்பெற்றது.
இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், உதயநிதியின் பேச்சைத் தொடர்ந்து சனாதனம் தொடர்பான விவாதம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக வரலாற்றுக்குள் போக வேண்டாம். ஆனால், அரசியல்சாசனப்படி உண்மையில் உறுதியாக இருங்கள். சனாதனம் குறித்த தாக்குதல்களை அமைதியாக எதிர்கொள்ளக்கூடாது. சனாதனத்திற்கு எதிரான கருத்துக்களுக்கு உண்மையைக் கொண்டு பதிலடி தர வேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, பதிலடி கொடுக்க சொல்லியிருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.