பிளவு விதைகளை விதைக்கிறது காங்கிரஸ் கட்சி!
Oct 16, 2026, 11:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிளவு விதைகளை விதைக்கிறது காங்கிரஸ் கட்சி!

சோனியா காந்திக்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பதிலடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 6, 2023, 09:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மூத்த அரசியல்வாதியான சோனியா காந்திக்கு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் எப்படி நடைபெறும் என்பது தெரியாமல் இருப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.

வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு கூட்டி இருக்கிறது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி எதிர்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில்,  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சோனியா காந்தி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.

அக்கடிதத்தில், “பொதுமக்களின் அக்கறை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்புவதற்கு வாய்ப்பளிக்கும் என்பதால், இந்த சிறப்பு அமர்வில் எதிர்க்கட்சிகள் நிச்சயமாக பங்கேற்க விரும்புகின்றன. ஆனால், கீழ்கண்ட முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், அக்கடிதத்தில் 8 விஷயங்களையும் பட்டியலிட்டிருந்தார். அதில், சீன எல்லை, அதானி, மணிப்பூர் கலவரம், ஹரியானா கலவரம் உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து சோனியா காந்திக்கு  விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில்தான், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், சோனியாவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், “சோனியா காந்தி போன்ற மூத்த அரசியல் தலைவர்களுக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது கூடத் தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 85-வது பிரிவு நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்படுவதாக தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், சிறப்பு அமர்வில் என்ன விவாதிக்கப்படும் என்பது குறித்த அலுவல் குறிப்பு கூட்டத்தின்போது வழங்கப்படும். ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நாடாளுமன்றக் கூட்டம் என்றாலே, அதை அரசியலுக்குள் இழுப்பது வருத்தமளிக்கிறது.

மேலும், நாடாளுமன்றம் என்பது நமது தேசியப் பெருமையின் சின்னம். அதை அரசியல் சர்ச்சைகளுக்குள் இருந்து விலக்கி வைக்க வேண்டும். ஆகவே, சோனியா காந்தியையும், அவரது கட்சியினரையும் சிறப்பு அமர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதேசமயம், சர்ச்சைக்குரிய விவாதங்களை தவிர்த்து ஆரோக்கியமாக விவாதங்களில் ஈடுபட வேண்டும். மக்கள் நலனுக்கான அரசாங்கத்தின் தொடர் முயற்சிகளுக்கு எதிர்கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும். காங்கிரஸிடம் எழுப்புவதற்கு உண்மையான பிரச்சினைகள் எதுவும் இல்லை. நாட்டில் பிளவு விதைகளை விதைக்கும் நோக்கில் அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகிறது” என்று கூறியிருக்கிறார்.

Tags: PM ModiCentral Ministersonia gandhiletterpiyush goyalreply
Share
Tweet
SendShare
Previous Post

செப்டம்பர் 3 சனாதன நாள்: அமெரிக்க மேயர் அறிவிப்பு!

Next Post

உதயநிதி பேச்சுக்கு உண்மையால் பதிலடி!-பிரதமர் மோடி. .

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies