ஒரே நாடு ஒரே தேர்தல்: ஆலோசனை கூட்டம்!
Mar 15, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல்: ஆலோசனை கூட்டம்!

அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 6, 2023, 10:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அர்ஜூன் ராம் மேக்வால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நம் நாட்டைப் பொறுத்தவரை, மாநில சட்டமன்றங்களுக்கு குறிப்பிட்ட காலக்கட்டங்களிலும், நாடாளுமன்றத்துக்கு மற்றொரு காலக்கட்டத்திலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு இன்னொரு காலகட்டத்திலும் தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதிலும், நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமே அனைத்து மாநிலங்களிலும் ஒரு சமயத்தில் நடைபெறுகிறது. அதேசமயம், சட்டமன்றத் தேர்தல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே காலக்கட்டத்தில் நடப்பதில்லை. வெவ்வேறு காலக்கட்டங்களில்தான் நடக்கிறது.

இதனால், நிறைய பொருளாதார விரையம் ஏற்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவு மட்டும் 62,000 கோடி ரூபாய் என்கிறது புள்ளி விவரங்கள். இது தவிர, ஒவ்வொரு மாநிலத்துக்கும் நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு தனித்தனியாக செலவு ஏற்படும். அதேபோல, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கு தனியாக செலவு செய்ய வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தோடு சேர்த்து சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி விட்டால், ஒரே செலவோடு முடிந்து விடும். அதோடு, கால விரையமும், மனித உடல் உழைப்பு விரையமும் தவிர்க்கப்படும்.

ஆகவே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற முழக்கத்தை கடந்த சில ஆண்டுகளாகவே பா.ஜ.க. முன்மொழிந்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கமிட்டி அமைத்து ஆய்வு செய்தபோதும், சரியான தீர்வுகள் கிடைக்கவில்லை. இதையடுத்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், தற்போது புதிதாக ஒரு குழுவை அமைத்திருக்கிறது மத்திய அரசு. இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் சி.காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இக்குழுவில் இடம்பெற மறுப்புத் தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், அவரது இல்லத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Amith shaone nation one electionramnath govindmeeting
ShareTweetSendShare
Previous Post

உதயநிதி பேச்சுக்கு உண்மையால் பதிலடி!-பிரதமர் மோடி. .

Next Post

ஜி20-ல் தெற்கின் குரல்: ஜெய்சங்கர் விளக்கம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies